நான் வேற்றுவன் தந்த
மலக்குவியலை
என்னவென்று கேட்காமல்
அள்ளித் திணித்தேன்
எனது நாவுள்
கையிலிருந்த அதன்
மீதியை எதிரில்
நின்றவர்களுக்கும்
எதுவும் சொல்லாமல்
வாயிலும் போட சொன்னேன்
தின்னவும் செய்தார்கள்
அதில் மீந்த மலக்குவியலை
மற்றவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர்
அந்த மற்றவர்களும் அதே
திணிப்பை தவறாமல்
செய்தனர்;
ஏன்,
எதற்காக உண்டோம்
அதுயென்ன பயன்
தந்ததென தெரியாமல்
புரியாமலே தொடர்கிறது
மலக்குவியல் பகிரும்
வேலை மட்டுமேன்.
ச.ரே.அச்சமிலான்
அருமை அண்ணா….. இதைவிட வேறு எப்படியும் செருப்பால் அடித்தாற்போல் சொல்ல முடியாது…
LikeLiked by 1 person
நம்மின் கருத்து
தருக்கர் தனில்
காரி உமிழ்வது
போன்றிருக்க
வேண்டும்
நீயும்
அவ்வழி
யாத்து
எடுப்பாயென
நம்புகிறேன்.
LikeLiked by 1 person
உன் கவி படித்தே .. எழுத பழகுவள் நான் அண்ணா
LikeLike
அச்சமிலான் பெயருக்கேற்ற கவி அண்ணா
LikeLiked by 1 person
உன்றன் கவிதையை விடவா தங்கையே
LikeLike