1)
கோடில்
இப்பக்கமும் இல்லை
அப்பக்கமும் இல்லை
கோட்டின் மேலும் இல்லை
கோட்டின் அங்கமும் இல்லை
அந்தரவெளியில் அலைந்துவிட்டு
கோட்டில் அலைவு
என் கால்கள் மெல்ல
சாய்ந்தது…
2)
என் கோடற்ற தன்னந்தனியான
வனாந்திரத்தில் மாமிசம் புசிக்கும் விலங்குகள் உண்டு.
தன் மாமிசத்தையே இத்தனை
தீவிரமாய் பொதக்கென அள்ளித் திணிப்பது விசித்திரமாய் தோன்றவில்லை எனக்கு.
தன் சதை திரட்சியை
கூறு போட்டு விற்பதில்
எவ்வளவு பேராசை
கொள்ளுகிறது
முடமான மனம்.
கோடற்ற நிலை
ஏய்த கோடெதுவோ
அதை அழி அல்லது
அந்தரவானில் உலா
போ.
3)
வழமைக்கு மாறாக
நேற்றும் இன்றும்
இன்றேன்
நிற்பதில்லை
ஏன் நிற்கவியலாது
ஒன்றோடொன்று
ஒன்றிணைந்த
கலவை உண்டாவதா ?
உண்டாவது இருக்கட்டும்
கோடில் முட்டிய சுவர்
இத்தனை படையெடுப்பு
செய்த பின்னும்
தளராத பலம் கொண்டது
கோடின் மகத்துவமா
கோடற்ற தோல்விமயமா
ஏதுமில்லை
இரண்டுமில்லை
எல்லாம்.
4)
மார்பின் கோடில்
சறுக்கி சறுக்கி
விளையாடி
கோடழி உற்சவம்
தினந்தோறும்
நிகழும்.