நானொரு ஆருமற்ற
ஆனாதை பிண்டம்
வருஷா வருஷம்
வந்து துவைக்கும்
திதி நாளன்று
வீசி உள் துரத்தும்
ஜென்மால்யா பிண்ட
உருண்டை கரைந்து
போவது கண்டோ
எவ்வித எத்தனமும்
அற்று எதிர்வரும்
தவசத்திற்கு
தலைமேல் கை
வைத்து நிற்பர்
தனக்கு தவசம்
செய்ய வக்கற்றவர்கள்….
ச.ரே அச்சமிலான்