தாம் பாட்டிற்கு ஒரு
பக்கம் நிலையாக நின்றுக்
கொண்டிருக்கிறேன்
தனிச்சுவராக.
என் மூன்று திசையில்
நாற்றம் பிடித்த சுவர்கள்
மலம் படிந்த மஞ்சள்
கறைகளின் எச்சம்
மணற்தரையில் மற்றதின்
வாய் கழிவுநீர்
குட்டை,எரிகள்
ஆக பிம்பம்.
மையத்தில் நச்சுப்
பாம்பின் ஸ் என்கிற
ஓசை தேற்றம்.
யாரேனும் வெளியிலிருந்து
கற்கள் வீசினால்
என்னை பாம்பு தன் கொடிய
நச்சை உமிழ்ந்து கடுமையான
சண்டையிடும்.
தாக்கியது யாரோ
உடைக்கப்பட்டது
என்னை .